தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு, வரும் 30ம் தேதி விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின் மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பகுதி நேர ஆசிரியர்களுக்கான விருப்ப மாறுதல் கலந்தாய்வை, வரும் 30ம் தேதி நடத்த வேண்டும். முதலில் அந்தந்த மாவட்டத்திற்கு உள்ளும், பின் மாவட்டம் விட்டு மாவட்டமும், அதைத்தொடர்ந்து மனமொத்த மாறுதலும் நடத்த வேண்டும்.
மாறுதல் பெறும் பயிற்று நபர்களை, பணியிலிருந்து விடுவித்து, பின், புதிய பணியிடத்தில் சேரும் வகையில், மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த மாறுதலை விருப்பப்படி பெறுவதால், இதை ரத்து செய்யவோ மாற்றவோ கூடாது.
இதற்கான விண்ணப்பங்களை, வரும் 20ம் தேதிக்குள் பெற்று, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். பதிவேற்றியதை, 24ம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும்.
நுாறு மாணவர்களுக்கு மேல் படிக்கும் பள்ளிகளுக்கு மட்டுமே, இந்த மாறுதலை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோரின் பெற்றோர், அறுவை சிகிச்சை செய்தோர் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக