கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் மளிகை பொருட்கள் அடங்கிய 3 வகையான பொங்கல் தொகுப்புகளை விற்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.
அரசு கூட்டுறவுத்துறை சார்பில் பண்டிகை காலங்களில், பண்டிகைக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. விலை மலிவாகவும், பொருட்கள் தரமாகவும் இருப்பதால், இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'கூட்டுறவு பொங்கல்' என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புகளை விற்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த தொகுப்புகளில் பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற உள்ளன.
இதுகுறித்து அனைத்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன் அனுப்பியுள்ள செயல்முறை ஆணையில் கூறியிருப்பதாவது: அடுத்த மாதம் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, 'கூட்டுறவு பொங்கல் தொகுப்பு' என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புகளை விற்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. அவற்றை நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், சுயசேவை பிரிவுகள், நியாயவிலைக் கடைகளில் விற்க வேண்டும்.
ரூ.199 முதல் 999 வரை: இதில் ரூ.199-க்கு 'இனிப்பு பொங்கல் தொகுப்பு' (8 பொருட்கள்), ரூ.499-க்கு 'சிறப்பு கூட்டுறவு பொங்கல் தொகுப்பு' (20 பொருட்கள்), ரூ.999-க்கு 'பெரும் பொங்கல் தொகுப்பு' (35 பொருட்கள்) ஆகிய 3 வகைகளில் பொங்கல் தொகுப்புகள் விற்கப்பட உள்ளன. இத்தொகுப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
14.01.2025 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு "கூட்டுறவு பொங்கல்" என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்க மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை தயார் செய்து தங்கள் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களான நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவை பிரிவுகள், சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ளபடி
- இனிப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.199/-க்கும்,
- சிறப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.499/-க்கும் மற்றும்
- பெரும் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.999/-க்கும் விற்பனை செய்ய உத்தரவிடப்படுகிறது.
இனிப்பு பொங்கல் தொகுப்பு ரூ.199
* பச்சரிசி (BPT 43) - 500 கிராம்
* பாகு வெல்லம் - 500 கிராம்
* ஏலக்காய் - 5 கிராம்
* முந்திரி - 50 கிராம்
* ஆவின் நெய் - 50 கிராம்
* பாசி பருப்பு - 100 கிராம்
* உலர் திராட்சை - 50 கிராம்
* சிறிய பை - 1
----------------------------
சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499
* மஞ்சள் தூள் - 50 கிராம்
* சர்க்கரை - 500 கிராம்
* துவரம் பருப்பு - 250 கிராம்
* கடலைப் பருப்பு - 100 கிராம்
* பாசிப் பருப்பு - 100 கிராம்
* உளுத்தம் பருப்பு - 250 கிராம்
* கூட்டுறவுப்பு - 1 கிலோ
* நீட்டு மிளகாய் - 250 கிராம்
* தனியா - 250 கிராம்
* புளி - 250 கிராம்
* பொட்டுக் கடலை - 200 கிராம்
* மிளகாய் தூள் - 50 கிராம்
* செக்கு கடலை எண்ணெய் - 1/2 லிட்டர்
* கடுகு - 100 கிராம்
* சீரகம் - 50 கிராம்
* மிளகு - 25 கிராம்
* வெந்தயம் - 100 கிராம்
* சோம்பு - 50 கிராம்
* பெருங்காயம் - 14 கிராம்
* மளிகை பை - 1
----------------------------
பெரும் பொங்கல் தொகுப்பு ரூ.999
* மஞ்சள் தூள் - 50 கிராம்
* சர்க்கரை - 1/2 கிலோ
* கூட்டுறவுப்பு - 1 கிலோ
* துவரம் பருப்பு - 1/4 கிலோ
* உளுந்தம் பருப்பு - 250 கிராம்
* கடலை பருப்பு - 200 கிராம்
* பச்சை பட்டாணி - 100 கிராம்
* பாசி பருப்பு (சிறுபருப்பு) - 250 கிராம்
* வெள்ளை சுண்டல் - 200 கிராம்
* வேர்க்கடலை - 200 கிராம்
* பொட்டுக்கடலை - 200 கிராம்
* வரமிளகாய் - 250கிராம்
* புளி - 200 கிராம்
* தனியா - 25 கிராம்
* கடுகு - 100 கிராம்
* மிளகு - 50 கிராம்
* சீரகம் - 50 கிராம்
* வெந்தயம் - 100 கிராம்
* சோம்பு - 50 கிராம்
* ஏலக்காய் - 5 கிராம்
* செக்கு கடலை எண்ணெய் - 1/2 லிட்டர்
* வரகு - 500 கிராம்
* சாமை - 500 கிராம்
* திணை - 500 கிராம்
* ரவை - 500 கிராம்
* அவல் - 250 கிராம்
* ராகி மாவு - 500 கிராம்
* கோதுமை மாவு - 500 கிராம்
* ஜவ்வரிசி - 200 கிராம்
* வறுத்த சேமியா - 170 கிராம்
* மல்லி தூள் - 50 கிராம்
* சாம்பார் தூள் - 50 கிராம்
* மிளகாய் தூள் - 50 கிராம்
* பெருங்காயத் தூள் - 25 கிராம்
* பெரிய மளிகை பை - 1
- மேற்குறிப்பிட்ட பெரும் பொங்கல் பெயரில் தொகுப்புடன் விலையில்லாமல் நாட்டு சர்க்கரை 500 கிராம் வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக