கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், நல்லேபிள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில், கடந்த 20ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.
கொண்டாட்டத்தின் இடையே பள்ளிக்கு வந்த மூவர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அணிந்த ஆடைகளைப்பற்றி கேள்வி எழுப்பினர். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில், ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அச்சுறுத்தி சென்றுள்ளனர்.
இதுகுறித்து, பள்ளி ஆசிரியர்கள் அளித்த புகாரின் பேரில், சித்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் பள்ளிக்கு வந்து அச்சுறுத்தி சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக, நல்லேபிள்ளி பகுதியைச்சேர்ந்தவர்களான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாவட்ட செயலாளர் அனில்குமார், 52, பஜ்ரங்தள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுசாசனன், 52, விஸ்வ ஹிந்து பரிஷத் ஊராட்சி குழு தலைவர் வேலாயுதன், 58, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக