இந்த வலைப்பதிவில் தேடு

கவர்னர் உரை - பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை!

திங்கள், 23 டிசம்பர், 2024

 



தமிழ்நாட்டில் பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். அதில் பெரும்பாலான கோரிக்கைகள் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவை ஆகும். அதை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். ஆனால் அரசு தரப்பில் அதற்கான முடிவு எடுக்கப்படவில்லை.


இந்நிலையில்,பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் அறிவிப்பை கவர்னர் உரையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இடம்பெற செய்ய வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பணி நிரந்தரத்திற்கு 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் காத்துள்ளனர்.


13 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக 3,700 உடற்கல்வி, 3,700 ஓவியம், 2,000 கணினி அறிவியல், 1,700 தையல், 300 இசை, 20 தோட்டக்கலை, 60 கட்டிடக்கலை, 200 வாழ்வியல்திறன் என மொத்தம் 12 ஆயிரம் பேர் தற்காலிக அடிப்படையில் பணிபுரிகின்றனர். தற்போது வழங்கப்படும் 12,500 ரூபாய் தொகுப்பூதியம் கைவிட்டு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


பணி நிரந்தரம் ஒன்றே வாழ்வாதாரம் என்றும், பணிப் பாதுகாப்புக்கு வழி வகுக்கும் என்றும் கூறியுள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் விரைவில் தங்களுக்கு விடியல் தர வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அப்போதுதான் அவர்களுடைய வாழ்வாதாரமும் குடும்பமும் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர்.


தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181இல் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக சொன்னதை நம்பி, 12 ஆயிரம் குடும்பங்கள் எதிர்பார்த்து விடியல் கிடைக்கும் என எதிர்பார்த்து உள்ளனர். நான்காவது ஆண்டில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்து கொண்டுள்ளார். திமுக தலைவராக கொடுத்த இந்த பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின்தான் நிறைவேற்ற ஆணையிட வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை வைத்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent