அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுவதற்கு அரசு நிதிஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெற்றோரின் ஒத்துழைப்பை பெறுவது, மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தவும், ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
பெண் கல்வி, கட்டாய கல்வி உரிமைச் சட்டம் உள்ளிட்ட கருத்துகளை மையப்படுத்தி, விழாக்கள் நடத்தவும், அதனை பள்ளி கல்வி இணையதளத்தில் பதிவு செய்து, அனுப்பவும் பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்துகிறது.
சில பள்ளிகளில், ஆசிரியர்களின் விருப்பம் மற்றும் பெற்றோர் ஒத்துழைப்பால், விழாவை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.பல பள்ளிகளில், அதற்கான வாய்ப்பில்லை. ஆண்டு விழா நடத்தப்படுவதை ஊக்குவிக்க, அரசின் சார்பில், நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.
இதனால், பெரும்பான்மையான பள்ளிகளில் ஆண்டுவிழா பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. சில பகுதிகளில் பள்ளி நிர்வாகத்தினருக்கு ஆர்வம் இருப்பினும், நிதியுதவி இல்லாததால் விழா கொண்டாடப்படுவதில்லை.
நடப்பு கல்வியாண்டில், அரையாண்டு நிறைவடைந்துள்ளதால் பல பள்ளிகளிலும் விழாக்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.அனைத்து பள்ளிகளிலும், ஆண்டுவிழா கொண்டாடுவதற்கு அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென, அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக