கல்லூரி மாணவிகள், பெண்கள் காவல் உதவி செயலியை தங்களது செல்போனிலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தமிழக காவல்துறையும், அமைச்சர் கோவி செழியனும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பெண்கள் குறிப்பாக மாணவிகள் 'காவல் உதவி செயலியை' தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கல்லூரி மாணவிகள் அனைவரும் காவல் உதவி செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து, ஆபத்தாக உணரும் காலத்தில் பயன்படுத்துமாறு அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ள உதவும் ‘காவல் உதவி’ செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அவசரக் காலங்களில் ‘சிவப்பு நிற அவசரம்’ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும். மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இச்செயலியை Google Play Store, App Store-இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில், "காவல் உதவி செயலி" (KAAVAL UTHAVI APP) பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்டது. எந்த வகையான இன்னல் அல்லது அவசரநிலையின் போதும், உடனடி உதவியைப் பெறுவதற்காக கட்டுப்பாட்டு அறைக்கு அவசர எச்சரிக்கையை அனுப்புவதற்கும் காவல் உதவி செயலியைப் பயன்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக