இந்த வலைப்பதிவில் தேடு

NEET தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியீடு

சனி, 28 டிசம்பர், 2024

 



இளநிலை மருத்துவ படிப்பு​களுக்கான நீட் தேர்வு பாடத்திட்டம் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) வெளி​யிட்​டுள்​ளது.


நாடு முழு​வதும் அரசு மற்றும் தனியார் மருத்​துவக் கல்லூரி​களின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு​கள், சித்தா, ஆயுர்​வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்​துவப் படிப்​பில் அகில இந்திய ஒதுக்​கீட்டு இடங்​களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்​தப்​படு​கிறது. அதேபோல், ராணுவ கல்லூரி​களில் பிஎஸ்சி நர்சிங் படிப்​புக்கு நீட் தேர்வு கட்டாய​மாக்​கப்​ பட்​டுள்​ளது. நீட் தேர்வை தேசிய தேர்​வுகள் முகமை (என்​டிஏ) ஆண்டுதோறும் நடத்துகிறது.


அதன்​படி, 2025-26 கல்வி​யாண்​டுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு நாடு முழு​வதும் நடைபெறவுள்​ளது. நீட் தேர்​வில் கேட்​கப்​படும் 180 வினாக்​களுக்கு தலா 4 மதிப்​பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்​பெண்கள் வழங்​கப்​படு​கின்றன. தாவர​வியல் மற்றும் விலங்​கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்​தில் இருந்து 360 மதிப்​பெண்​களுக்​கும், இயற்​பியல் மற்றும் வேதி​யியலில் தலா 180 மதிப்​பெண்​களுக்​கும் கேள்விகள் இடம்​பெறுகிறது.


இந்நிலை​யில், நீட் தேர்​வுக்கான பாடத்​திட்​டங்கள் குறித்த விவரங்கள் https://www.nmc.org.in/ என்ற இணையதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன் அடிப்​படை​யில் கேள்வி​கள் இடம்​பெற உள்​ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent