நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் (24 வயது). இவர் கோவை மாவட்டம் சூலூரில் தங்கியிருந்து ஒரு ஓட்டலில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
அப்போது தொண்டாமுத்தூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவிக்கும், சந்தானத்துக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியது.
இதையடுத்து அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி சந்தானம் தனது சொந்த ஊருக்கு கடத்தி சென்றதாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் தொண்டாமுத்தூர் போலீசார், நெல்லைக்கு விரைந்து சென்று சந்தானத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக