முள்ளங்கி கீரை மூலம் சிறுநீர் கோளாறு ,மஞ்சள் காமாலை ,வயிற்று கோளாறு போன்ற நோய்களை குணமாக்கலாம் இதன் மூலம் சர்க்கரை நோய் முதல் கண் பார்வை கோளாறு வரை குணமாக்கலாம் ,மேலும் இந்த கீரை மூலம் குணமாகும் நோய்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.முதலில் முள்ளங்கிக் கீரையை எடுத்து கொள்ளவும் .பின்னர் நீரில் வெந்தயம் கொஞ்சம் ஊற வைக்கவும் .
இந்த வெந்தயம் ஊறவைத்த நீரில் முள்ளங்கி கீரையை அரைத்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும்.
2.சிலருக்கு சிறுநீரக கற்கள் இருக்கும் .இப்படி இருப்பவர்கள் முள்ளங்கிக் கீரை சாறை
தொடர்ந்து 21 நாள்கள் குடித்தால் சிறுநீரக கற்கள் வெண்ணெயை போல கொஞ்சம் கொஞ்சமாக கரையும்
3.சிலருக்கு சிறுநீர் பிரியாமல் இருக்கும் .இந்த சிறுநீர் பிரித்தலுக்கு முள்ளங்கிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லியை வேக வைத்து சாப்பிட்டால் உடலுக்கு நலம் சேர்த்து சிறுநீர் தாராளமாகப் பிரியும் .
4.சிலருக்கு கல்லீரல் நோய் இருந்து கொண்டு அல்லல் படுவர் ,இந்த நோய் குணமாக முள்ளங்கிக் கீரைச் சாறுடன் வெல்லம் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் நோய்கள் மாயமாய் மறைந்து விடும்
5.சிலருக்கு பசி எடுக்காது .அப்படி பட்டவர்கள் அது பற்றி கவலை கொள்ள வேண்டாம் .
அவர்கள் முள்ளங்கி கீரை சாறில் மிளகை ஊறவைத்து கொள்ளவும் . பின்னர் அதை பொடியாக்கி அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு தேனில் குழைத்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுத்து ஒரு பிடி பிடிக்கலாம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக