நீதிமன்ற உத்தரவு காரணமாக மாற்றி அமைக்கப்பட்ட DEO தேர்வு பட்டியல்:
* 2021 ஆம் ஆண்டு நேரடி போட்டித் தேர்வு மூலம் 20 பேர் மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
* இதில் இனச் சுழற்சியில் தவறு நடந்ததாக கூறி நிர்மல் குமார் என்பவர் வழக்கு தொடுத்தார்.
* மேற்கண்ட வழக்கை விசாரித்த *சென்னை உயர் நீதிமன்றம் மாவட்ட கல்வி அலுவலர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து புதிய திருத்திய தேர்வுப் பட்டியலை வெளியிட ஆணையிட்டது.
* இதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது....
* மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவின் படி திருத்திய தேர்வுப்பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் , அந்த பட்டியல் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் இடைக்கால ஆணை வழங்கப்பட்டது.
* இந்நிலையில் *தற்போது திருத்திய முன்னுரிமைப் பட்டியலை TNPSC வெளியிட்டுள்ளது. இதில் நான்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் பதவியை இழக்கின்றனர். புதிதாக மூன்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
* TNPSC இன் தவறான இனச்சுழற்சி கடைபிடிப்பு காரணமாக பணிவாய்ப்பு இழந்த பணி நாடுநர்கள் தற்பொழுது மாவட்ட மாவட்ட கல்வி அலுவலராக நீதிமன்ற உத்தரவின் காரணமாக பணி நியமனம் பெற உள்ளார்கள்...
* அதிகாரம் மறுக்கின்ற நீதியை பல சமயங்களில் நீதிமன்றமே உறுதி செய்கிறது* என்பதனை மேற்கொண்ட பட்டியல் வாயிலாக அறிந்து கொள்ளலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக