பொள்ளாச்சி அருகே உள்ள அரசு பள்ளியில் பணியாற்றும் 5 ஆசிரியர்கள் அயல்பணி என்ற அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் மாவட்ட கல்வித்துறை சார்பில் தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் ஆசிரியர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பதும் , ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டுவதும் தெரியவந்தது. இதனால் மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி விசாரணைக்கு பின்னர் சம்மந்தப்பட்ட பள்ளியில் பணியும் ஆசிரியர்கள் 5 பேரை அயல்பணி என்ற அடிப்படையில் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சம்பந்தபட்ட பள்ளியில் பணிபுரியும் விவசாயப் பிரிவு ஆசிரியர் செல்வராஜ் என்பவரை வேட்டைக்காரன் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், இசை ஆசிரியர் செல்வராஜ் என்பவரை தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், தாவரவியல் ஆசிரியர் பாலசுப்பிரமணியம் என்பவரை பொள்ளாச்சி நகரவை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், வேதியியல் ஆசிரியர் சுஜாதா என்பவரை ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், வரலாறு ஆசிரியர் கலைச்செல்வன் என்பவரை குளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இதில் மறு உத்தரவு வரும்வரை அயல்பணிக்கு 5 ஆசிரியர்களையும் பணி இடமாற்றம் செய்து உத்திரவிட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வீடியோ வெளியான சம்பவம் குறித்து தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் 5 ஆசிரியர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக