இந்த வலைப்பதிவில் தேடு

லஞ்சம் - தலைமை ஆசிரியர் கைது

சனி, 13 செப்டம்பர், 2025

 

மாற்று சான்றிதழ் கேட்ட முன்னாள் மாணவரிடம் ரூ.5,000 லஞ்சம்; தலைமை ஆசிரியர் கைது



நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள களியனூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 45 வயதாகும் ஜெயவேல் ஜோதிடர் ஆவார். இவர் இ-சேவை மையம் அமைப்பதற்காக மேற்கொண்டு படிக்க முடிவு செய்தார். இவர் கடந்த 1990-91-ம் ஆண்டில் 5-ம் வகுப்பு வரை படித்து முடித்துள்ளார். இதையடுத்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கண்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் (50) என்பவரிடம் மாற்றுச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பத்துள்ளார்.



அதற்கு அவர் படித்து முடித்து 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ஆவணங்களை சரிபார்த்துவிட்டு பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்குவதாக தலைமை ஆசிரியர் விஜயகுமார் கூறினாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத ஜெயவேல், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.


அதைத்தொடர்ந்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைபடி ரசாயன பவுடர் தடவிய 5 ஆயிரத்திற்கான ரூபாய் நோட்டுகளை நேற்று பள்ளியில் வைத்து ஜெயவேல் தலைமை ஆசிரியர் விஜயகுமாரிடம் வழங்கினார். 


அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி (பொறுப்பு) ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் தலைமையிலான போலீசார் தலைமை ஆசிரியர் விஜயகுமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுச்சான்றிதழ் வழங்க ஜோதிடரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பள்ளிப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent