அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வைத்து, மருத்துவ படிப்பில் சேர உதவும் வகையில், அரசின் சார்பில், இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சியை அளிக்க, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் பயிற்சி நிறுவனத்துக்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.மேலும், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் சார்பில், நீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சிக்கு, இலவச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக, மாவட்டந்தோறும், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய பாடங்களில், தலா இரண்டு ஆசிரியர்கள் வீதம், மாவட்ட வாரியாக, 320 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.இவர்களுக்கு, ஈரோட்டில் நேற்று துவங்கிய சிறப்பு பயிற்சி, இன்று முடிகிறது. ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் ஊர்களுக்கு திரும்பியதும், தங்கள் பகுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வழங்க, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக