இந்த வலைப்பதிவில் தேடு

குரூப் - 4 தேர்வு முடிவுகள், டிசம்பரில் வெளியிடப்படும்

சனி, 7 செப்டம்பர், 2019



'குரூப் - 4 தேர்வு முடிவுகள், டிசம்பரில் வெளியிடப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட எட்டு பதவிகளுக்கு, குரூப் - 4 தேர்வு, கடந்த, 1ம் தேதி நடந்தது. இதில், 14 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வுக்கான உத்தேச விடை குறிப்பு, ஒரு சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

அதில், குரூப் - 4 தேர்வுக்கான முடிவு, இந்தாண்டு டிசம்பரில் வெளியாகும்; இன்ஜினியரிங் பணிகளுக்கான தேர்வு மற்றும் 'குரூப் - 1' முதன்மை தேர்வின் முடிவுகள், அக்டோபரில் வெளியாகும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பட்டியலில், 19 தேர்வுகளின் முடிவுகள், வெளியாகும் தேதிகள் இடம் பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent