இந்த வலைப்பதிவில் தேடு

நாம் கொண்டாடிய (மறந்த) கார்த்திகை தீப கொண்டாட்டம்

புதன், 18 டிசம்பர், 2019



எங்களுக்கு அப்ப தீபாவளிக்கு பட்டாசு வாங்க எல்லாம் காசு கிடையாது நானும் எனது தம்பிகளும் இன்னும் நாளு ஐஞ்சி பேர் ஓன்னு சேர்வோம் ஒருத்தன் பனை மரம் ஏறுவோம் தேவையான பனை புடக்கை மற்றவர்கள் கோணி பைல கொண்டு வருவோம் ஒன்ன குழி நோண்டுவோம் பணை புடக்கை இருக்கும் அளவுக்கு நாளு, ஐஞ்சி குழியா தோன்டி பணை புடக்கைய போட்டு மண்ணெண்ணெய்ய ஊத்திவேக வைப்போம்

பிறகு நல்லா மொரத்தால விசுருவோம், புகை நிறைய வரும் கொளுந்து விட்டு எரியும் கொஞ்சம் நேரம் பிறகு எரிஞ்சதும் அது மேல மண்ணை அள்ளி போட்டு மூடுவோம்

ஒரு அரை மணிநேரம் அமைதி காப்போம் பின்புசூடு தெளிந்த பின் ஓரு கல்ல எடுத்து ஓவ்வொன்னா போட்டு அரைப்போம் அதுல
#உப்பு கொஞ்சம் போட்டு அரைப்போம்

அரைச்ச பிறகு தாத்தா வோட பழைய வேட்டி அப்பா வோட பழைய லுங்கிய தூக்கிட்டு வந்து கிழிச்சி பெருசா முட்டை போல கட்டுவோம் பிறகு எங்க நிலத்தில் இருக்கிற பனை மரத்தில் நல்லா தடியா இருக்குறதா பாத்து வெட்டி எடுத்து வருவோம். 

ஒரு கார்த்திகை மாவளிக்கு ஒரு பனையே 3 பிளந்து அதான் நடுவுல இட்டுபின்பு வீட்டுல இருக்குற ஆடு மாடு கட்டும் கயிர எடுத்து நல்லா இறுக்கி கட்டிவச்சி சாமிக்கு படைத்து நிலா வந்ததும் அடுப்புல இருக்குற நெருப்ப அது மேல போட்டு உப்பு கொஞ்சம் நிறையவே போட்டு கந்து பெரிசா நெருப்பு போல வந்ததும் வீட்டா விட்டு வெளிய வந்து ஊர் நடுவே உள்ள பொது இடத்துக்கு வந்து தலைக்கு மேல வேகமா

"கார்த்தி கார்த்தி கம்மா கார்த்தி" என்றும்
"மாவோளோ மாவளுன்னு" சுத்தி விடும்வோம் பாரு அது தான் எங்களுக்கு சந்தோசமே செமயா இருக்கும்

அது ஒரு காலம்

அருமையான கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் ஏற்றும் நேரத்தில் நாங்களும் அப்படிதான் இருந்தோம்.

இப்பொழுது இருக்கும் தலைமுறைக்கு இப்படி ஒரு பண்டிகை இருப்பதே தெரியாமல் போனது வருத்தத்தை எற்படுத்துகிறது.......
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent