இந்த வலைப்பதிவில் தேடு

5 மாவட்டங்களில் இயல்பை விட வெயில் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

புதன், 18 மார்ச், 2020



ஐந்து மாவட்டங்களில், இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ், வெயில் அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகம் முழுவதும், கோடை வெயில் அதிகரித்து வருகிறது. தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களை தொடர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதை சுற்றிய மேற்கு மாவட்டங்களிலும், வெயில் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, மதுரை, சேலம், தர்மபுரி, திருத்தணி நகரங்களில், 37 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. சென்னையில், விமான நிலையத்தில், 35; நுங்கம்பாக்கத்தில், 34 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

இந்நிலையில், 'திண்டுக்கல், மதுரை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களில், இன்று அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 2 முதல், 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்.

'திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் வறண்ட வானிலையே நிலவும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent