இந்த வலைப்பதிவில் தேடு

சத்தான மிளகு குழம்பு செய்வது எப்படி?

சனி, 28 மார்ச், 2020



நாம் தினமும் பல வகையான சமையல்கலை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில்

நாம் தினமும் பல வகையான சமையல்கலை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான மிளகு குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை 

  • மிளகு - 25 கிராம் 
  • சீரகம் - 3 தேக்கரண்டி 
  • தனியா - 2 தேக்கரண்டி 
  • மிளகாய் வற்றல் - 2 
  • புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு 
  • பெருங்காயம் - சிறு துண்டு 
  • கறிவேப்பிலை - 5 கொத்து
  • நல்லெண்ணெய் - கால் கப் 
  • கடுகு - 2 தேக்கரண்டி 
  • உப்பு - தேவையான அளவு 


செய்முறை 

முதலில் நான்கு தேக்கரண்டி எண்ணெயில், பெருங்காயம், மிளகு, சீரகம், தனியா, மிளகாய் வற்றல் ஆகியவற்றை வரிசையாக சிவக்க வறுக்க வேண்டும். பின் கருவேப்பிலையை போட்டு வதக்க வேண்டும். இவை எல்லாவற்றுடன் புளி, தேவையான உப்பு சேர்த்து மிக்சியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். 

வாணலியில் மீதியுள்ள எண்ணெயை விட்டு, அதில் கடுகு போட்டு தாளிக்க வேண்டும். வெடித்ததும் அரைத்த கலவையை விட்டு கிளற வேண்டும். இப்பொது சுவையான மிளகு குழம்பு தயார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent