இந்த வலைப்பதிவில் தேடு

புகாரில் சிக்கிய ஆசிரியர்களை பதவி உயர்வு பட்டியலில் இருந்து விடுவிக்க உத்தரவு

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

 






தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வை புதிய விதிகளின்படி நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு பட்டியலைத்தயாரித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்விஅதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்விஇயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பதவி உயர்வுக்குத் ஆசிரியர்கள் பட்டியல், துறை இயக்குநரகத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன.



அந்தப் பட்டியலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர்கள், புகார் மீதான விசாரணை நிலுவையில் உள்ளவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது கண்டறியப்பட்டது.


இதையடுத்து, புகாரில் சிக்கியவர்களை பதவி உயர்வு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்என்று உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தில், ‘பதவி உயர்வு பட்டியலில் ஒழுங்குநடவடிக்கைக்கு உள்ளானவர்களின் பெயர்களை விடுவித்து, புதிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வழக்கின் மீதான விசாரணை முடியாதவர்கள், குற்றச்சாட்டு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்குஉள்ளானவர்களை பரிந்துரைசெய்யக்கூடாது. விதிமுறைகளைப் பின்பற்றி, தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent