இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர்களை தலைமை ஆசிரியை மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..!!

சனி, 25 டிசம்பர், 2021

 





திருப்பூரில் பள்ளி மாணவர்களை சாதி பெயரை சொல்லி திட்டி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமை ஆசிரியை மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் இடுவாய் அரசு உயர்நிலை பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் பள்ளி தலைமை ஆசிரியையாக இடுவாய்பாளையத்தை சேர்ந்த கீதா என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர் பள்ளியில் பயிலும் பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக எழுந்த புகாரை அடுத்து தலைமை ஆசிரியர் கீதா பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.



இந்நிலையில் இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சரவணகுமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மங்களம் போலீசார் தலைமை ஆசிரியர் கீதா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பிக்கு, தேசிய ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent