இந்த வலைப்பதிவில் தேடு

11 கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல்: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு

சனி, 4 ஜூன், 2022

 





பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்கி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள், காலிப் பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புதல் மற்றும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அந்த பதவிகளுக்கு இணையான பணியிடங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் பதவி உயர்வு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.



இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நசருதீன் திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், சென்னையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குனராகவும், சிவகங்கை மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், புதுக்கோட்டை  மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரஸ்வதி  மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலராகவும், சென்னை தொடக்க கல்வி  இயக்கக துணை  இயக்குனர் (நிர்வாகம்) வெற்றிச் செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை  கல்வி அலுவலராகவும், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  திருவளர்ச்செல்வி, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும்  நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.



மேலும், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு நிகரான பணியிடங்களில் பணியாற்றும் முதுநிலையில் உள்ள  அலுவலர்களுக்கு  பதவி உயர்வு  அளிக்கப்படுகிறது. இதன்படி, நாமக்கல் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் ராமன், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், உளுந்தூர்பேட்டை  மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் தாமோதரன், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலர் விஜயா,  சென்னை தொடக்க கல்வி இயக்ககம் துணை இயக்குனராகவும் (நிர்வாகம்) பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஆணையிடப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent