இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளி திறக்கப்படும் போது மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டும்: அமைச்சர்

சனி, 4 ஜூன், 2022

 





குவைத், சார்ஜா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வந்துள்ள பயணிகளை, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.  பின்னர்  நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:  சென்னை, மதுரை, கோவை, திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், எந்த குரங்கு அம்மை பாதிப்பும் கண்டறியப்படவில்லை.


பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் தொடர்ந்து அணிவது நல்லது. விரைவில் இதுதொடர்பாக உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும். சட்டவிரோதமாக கருமுட்டையை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent