இந்த வலைப்பதிவில் தேடு

14 மாவட்டங்களில் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

சனி, 4 ஜூன், 2022

 





தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்ட கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் தென்காசி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இதைப்போன்று வரும் 5, 6, 7 தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent