தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று திடீரென சவரனுக்கு ரூ.280 குறைந்தது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. சில சமயங்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இந்த நிலையில் கடந்த 31ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,775க்கும், சவரன் ரூ.38,200க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 1ம் தேதி ஒரு சவரன் ரூ.37,920க்கு விற்பனையானது. அதன் பிறகு தங்கம் விலை உயர்ந்து வந்தது. 2ம் தேதி கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,760க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,080க்கும் விற்கப்பட்டது.
3ம் தேதி(நேற்று முன்தினம்) தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,810க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,480க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை திடீரென குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.4,775க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.38,200க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக