ஆசிரியர்களை அவமரியாதை செய்வதாக எழுந்த புகாரின் பேரில், வட்டார கல்வி அலுவலரிடம், தொடக்கக் கல்வி டிஇஓ விசாரணை நடத்தினார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில், சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
அதில், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் 1 ஆக பணிபுரிந்து வரும் பெண் அதிகாரி, தொடர்ந்து ஆசிரியர்களுக்கு எதி ரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப் பாக, ஒன்றிய அளவில் நடந்த எண்ணும், எழுத் தும் பயிற்சி கூட்டத்தில், பெண் ஆசிரியர்களை பெண் ஆசிரியர்களை கடுமையான சொற்களால் அவமரியாதையாக பேசி னார். தொடர்ச்சியாக ஒரு மையிலும், அவதூறாகவும் பேசி வருவதால், ஒன்றி யத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் கடும் மனஉ ளைச்சலுக்கு ஆளாகி வரு கின்றனர்.
'அயோத்தியாப்பட்டணம் வட்டார கல்வி அலுவலர், பெண் ஆசிரியர்களை அவமரியாதையாக பேசினார்' என்பன உள்ளிட்ட புகார்கள் கூறப்பட்டிருந்தன. இதுகுறித்து நேற்று, சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் விசாரித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக