ஜிபே மூலம் தற்போது புதிய மோசடி நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது ஜிபேவுக்கு பணத்தை அனுப்புகிறார். உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக கூறி பணத்தை திரும்ப அனுப்ப மோசடி நபர் கூறுவார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாராவது உங்கள் கணக்கில் தவறாக பணம் அனுப்பினால் காவல்நிலையம் வந்து பணமாக எடுத்து கொள்ளச் செல்லுங்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் யுபிஐ மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது.சிறிய பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால்கள் வரை யுபிஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி உள்ளது. பயன்படுத்துவதற்கு வசதியாகவும் சில வினாடிகளில் பணத்தை அனுப்பவும் முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள் பலரும் ரொக்க பரிமாற்றத்தை விட யுபிஐ மூலமாக பணம் செலுத்துவதையே விரும்புகின்றனர்.
இந்த சேவைகளின் மூலம் பணத்தை பெறுவதும் அல்லது வேறொருவருக்கு பணத்தை அனுப்புவதும் மிக மிக எளிமையாக உள்ளது. இதனால் பயனர்கள் பெரும்பாலும் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனையே விரும்புகின்றனர். ஓட்டல், டீக்கடை, மளிகை கடைகள் என அனைத்து இடங்களிலும் யுபிஐ மூலமாக பணம் செலுத்தும் வசதியுள்ளது. அதேவேளையில் எந்த அளவிற்கு எளிமையாக மாறுகிறதோ, அதே அளவிற்கு சில பிரச்சினைகளும் உருவாகின்றன.
இந்நிலையில் யாரோ ஒருவர் தவறாக உங்கள் கணக்கிற்கு பணம் செலுத்திவிட்டதாக கூறி பணம் திருப்பி கேட்டால் உடனடியாக காவல்நிலையத்தை அணுகுமாறும் தெரியாத நபர்கள் உங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தினாலும் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக