இந்த வலைப்பதிவில் தேடு

மருத்துவம் அறிவோம் - நாம் நாமாக இருப்போம்!

சனி, 6 மே, 2023

 



எதனையும் எப்படி சொல்கின்றோம் என்பது, என்ன சொல்கின்றோம் என்பதனை விட பல மடங்கு முக்கியமானது. ஆரோக்கியம் என்பது உடல் உறுப்புகள் சார்ந்தது மட்டும் அல்ல. 


வாழ்வின் முறையையும் சார்ந்தது என்பதனை அறிய வேண்டும். சிலர் நன்கு படித்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் படித்த பிரிவில் நன்கு தெளிவு பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் பிறரிடம் பேசும் பொழுதோ, விளக்கம் தரும் பொழுதோ வார்த்தைகள் சரி வர வெளி வராது. 


வியர்த்து கொட்டும். சட்டை நனைந்து விடும். ஏன் இப்படி? தன்னம்பிக்கை என்ற ஒன்று அவர்களிடம் சுத்தமாக இல்லை. எப்பொழுதுமே ஏதாவது தவறாக நடந்து விடும் என்று பயப்படுவார்கள். இப்படி இருப்பவர்களால் வாழ்வில் உரிய இலக்கினை பெற முடியாமல் போகின்றது. எளிதில் நோயாளிகள் ஆகி விடுகின்றனர். 


சிலர் எந்த உரிய தகுதியும் இல்லாமல் மிக அதிகமான தோரணைகளைச் செய்வார்கள். சமுதாயம் இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கும் பொழுது மளதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள். நிறைய தவறுகள் செய்வார்கள். எளிதில் நோயாளிகள் ஆவார்கள். மது, புகை போன்ற பழக்கங்களுக்கு அடிமை ஆவார்கள். மேற்கூறப்பட்ட இரண்டுமே வாழ்வின் தவறான போக்குதான். 


பொதுவில் ஒவ்வொரு மனிதனுக்கும் சுய மரியாதை என்ற ஒன்று உண்டு. அதன் பொருள் நம்மை மிகவும் தாழ்த்திக் கொள்ளவும் வேண்டாம். கற்பனையால் தன்னை மிக உயர்த்திக் கொள்ளவும் வேண்டாம். ஏனெனில் இரண்டு மே ஒருவரின் மன நலம் மற்றும் உடல் நலம் இரண்டினையும் பாதித்து விடுகின்றது. 


இவை இரண்டிற்குமே காரணம் தன்னம்பிக்கை இன்மைதான். நாம் நாமாக மட்டுமே இருப்போம். இது மன உளைச்சல் இன்றி வைக்கும். தன்னம்பிக்கையும் பிறக்கும். மேலும் நம் தன்னம்பிக்கையினை நாம் உணரவும். வெளிப்படுத்தவும் சில வெளிப்பாடுகளை மேற்கொள்வோம். 


அடுத்தவரிடம் நேராய் முகம், கண் பார்த்து பேசுதல்: 


பலர் பேசும் போது எதிரில் உள்ளவரை நேராக பார்க்க மாட்டார்கள். தரையைப் பார்த்து, விட்டத்தை பார்த்து என தன் முகத்தினை வேறு பக்கம் திருப்பி பேசுவார்கள். 


இவர்களை எதிராளி கணிக்கும் போது 


* இவர் கூச்ச சுபாவம் கொண்டவராக இருக்கலாம். * இவரிடம் மறைமுக தவறுகள் இருக்கலாம். 


* ஏதோ சங்கடம் இவருக்கு இருக்கின்றது என்று பல வகைகளில் கருத்து கொள்ளலாம். எனவே ஒருவரிடம் பேசும் போது அவரது கண்களைப் பார்த்து பேச வேண்டும். 


படபடப்பு: 


* பொதுவில் உயர் அதிகாரியுடன் பேசும் போது பலருக்கு இவ்வாறு ஏற்படுவதாகக் கூறுகின்றனர். தவறாய் பேசி விடக்கூடாது என்ற பயத்திலேயே அதிக தவறுடன் பேசுவர். 


* கை நகரங்களை கடித்து பிய்த்து விடுவர். * கால்கள் உதறும். மிகவும் படபடப்பான மனிதர். எந்த செயலையும் முறையாய் செய்ய மாட்டார் என்ற ஒரு கருத்தினை எதிராளி நினைப்பார். இதனால் நீங்கள் நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். 


இவர்கள் இத்தகைய நேரங்களில் நகங்களை கடிப்பதனை உணர வேண்டும். அமைதியான, நிதானமான, ஆழ்ந்த மூச்சினை சில முறை செய்தால் போதும். படபடப்பு நீங்கி விடும். நேராய் நிமிர்ந்து நிற்க வேண்டும்: வளைந்து, நெளிந்து, சாய்ந்து கோணலாய் நிற்பது ஒருவரைப் பற்றி கோணலான கருத்தினையே எதிராளி கொள்வார். நிமிர்ந்து நில்லுங்கள்.  கம்பீரமாய் இருப்பீர்கள். உங்களைப் பற்றிய மரியாதை கூடும். 


ஆள் பாதி ஆடை பாதி: 

இதனை நாம் நன்கு கேட்டிருப்போம். இங்கு ஆடை நன்கு இருக்க வேண்டும் என்பது விலை உயர்ந்த ஆடைகள் அல்ல. சுத்தமான, இஸ்திரி செய்த பருத்தி ஆடைகளுக்கு இருக்கும் மதிப்பே தனிதான். 


இப்படி அணியும் போது நீங்களே மனம் மகிழ்வீர்கள். தெளிவாக பேசுங்கள்: எதனையும் எப்படி சொல்கின்றோம் என்பது, என்ன சொல்கின்றோம் என்பதனை விட பல மடங்கு முக்கியமானது. குரல், சொல்லும் வேகம், தொனி தெளிவு இவை அனைத்தும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. 


* குரலே இல்லாமல் முணு முணுப்பது. 

* அதிக சத்தம் போட்டு பேசுவது. 

* வேகமாக பேசுவது. 

* ஒரே கருத்தினை திரும்ப திரும்ப சொல்வது. வார்த்தைகள் சரிவர அமையப் பெறாமல் திணறுவது. சிறு இடைவெளி கூட இல்லாமல் பேசுவது. 


இவை அனைத்துமே ஒருவரின் மரியாதையை குலைத்து விடும். மாறுக. அமைதியான உறுதியான குரலில் பேசுங்கள். அளவாய் பேசுங்கள். தெளிவாய் பேசுங்கள். கடுமையான வார்த்தைகளை அகராதியில் இருந்து நீக்கி விடுங்கள். தன்னம்பிக்கையும் கூடும் மரியாதையும் கூடும். 


புன்னகை புரியுங்கள்: 


புன்னகை இயற்கை நமக்கு கொடுத்த சொத்து. மெல்லிய புன்னகை உங்களையும் எதிராளியையும் மகிழ்வாய் வைக்கும். மிக சத்தமாக சிரிப்பதும் வில்லத்தனமாக சிரிப்பதும் வேண்டாமே. 


அறிவே பலம்: 

நிறைய படிக்க வேண்டும். நிறைய கேட்க வேண்டும். நிறைய அறிய வேண்டும். இதனை அன்றாடம் செய்ய வேண்டும். ஏனெனில் அறிவே பலம். ஆரோக்கியம் என்பது உடல் உறுப்புகள் சார்ந்தது மட்டும் அல்ல. 


வாழ்வின் முறையையும் சார்ந்தது என்பதனை அறிய வேண்டும். உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் மருந்து எடுத்துக் கொள்வதுடன் கீழ் கூறப்பட்டுள்ளதனையும் செய்ய வேண்டும். ரிலாக்ஸ் செய்வது அவசியம். மூச்சினை ஆழ் மூச்சாக நிதானமாய் செய்தல். தியானம் செய்தல். அல்லது வேறு பிடித்த முறை - படிப்பது, ஓவியம் வரைவது போன்றவை ஸ்ட்ரெஸ் அளவினை குறைக்கும். 


இது உயர் ரத்த அழுத்தத்திற்கு இயற்கை வைத்தியம் ஆகும். தொடர்ச்சியாக மருத்துவர் அறிவுரைபடி அன்றாடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுவது போன்றவையும் நன்மை பயக்கும். மருந்து எடுத்துக் கொள்பவர்கள் தன் இஷ்டப்படி மருந்தினை கூட்டவோ, குறைக்கவோ, நிறுத்தவோ கூடாது. 


மரத்துப் போகுதல் அல்லது உணர்வின்மை மரத்துப்போகுதல் அல்லது கிறுகிறுத்த உணர்வு அல்லது ஏதோ ஊசி குத்துவது போன்ற உணர்வு தற்காலிகமாக சிலருக்கு ஏற்படலாம். தோள், கை, கால், பாதம் இவற்றில் இந்த உணர்வு ஏற்படலாம். பல நேரங்களில் இது சாதாரண காரணங்களால் இருக்கலாம். 


ஒரே மாதிரி நிலையில் அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது அல்லது நின்று கொண்டு இருப்பது. கழுத்தில் ஏதோ அடி என்றால் அங்கு ஏற்படும் நரம்பு தாக்குதலால் கை, தோள், விரல்கள் என எங்கும் இடத்திற்கு ஏற்ப மரத்திருக்கும் தன்மையை ஏற்படுத்தலாம். கீழ் முதுகில் ஏற்படும் பாதிப்பு கால்களில் மரத்துப் போகும். குறுகுறுக்கும் தன்மையினை ஏற்படுத்தலாம். 


தண்டுவட பாதிப்பு நரம்புகளில் தரும் அழுத்தத்தால் ஏற்படலாம். ஹெர்பெஸ், எச்.ஐ.வி.- எய்ட்ஸ், லெப்ரசி, சிபிலிஸ், டி.பி. போன்ற பாதிப்புகளால் ஏற்படலாம். ரத்த ஓட்டத்தில் குறைவு அல்லது ரத்த ஓட்டம் இல்லாமை ஏற்படும்பொழுது- (உதாரணம்) ரத்தக்குழாய் வீக்கம், ரத்தக்குழாய் தடித்தல் காரணமாக பாதிப்பு ஏற்படலாம். 


முறையற்ற அளவில் பொட்டாசியம், கால்சியம், சோடியம் உடலில் இருப்பது காரணமாக இருக்கலாம். பி வைட்டமின்கள் பி, பி6, பி12 போன்றவைகளின் குறைபாடு. சில வகை மருந்துகள் எடுத்துக் கொள்வது. மது, புகைபிடித்தல், விலங்குகள் கடித்தல், சில சிகிச்சை முறைகள், கடல் உணவுகளின் விஷத்தன்மை, பூச்சிக்கடி போன்ற காரணங்கள் மற்றும் சில மருத்துவ காரணங்களால் இருக்கலாம். 


மணிக்கட்டில் அழுத்தம், ஒற்றைத் தலைவலி, வலிப்பு நோய், பக்கவாதம், நீரிழிவு நோய் பாதிப்பு, தைராய்டு குறைபாடு, ரத்த குழாய்கள் சுருங்குதல் போன்ற காரணங்களாலும் பாதிப்பு ஏற்படலாம். சாதாரண காரணம் முதல் பெரிய பாதிப்பு வரை இருப்பதால் மருத்துவர் ஆலோசனை, சிகிச்சை பெறுவதே நல்லது. 


மேலும் இந்த பாதிப்புடன் கை, கால் அசைப்பதில் கடினம் இருந்தாலோ, தலை, கழுத்து, பின் முதுகு இவற்றில் அடிபட்டவுடன் கை, கால், நகர்த்துவதில் கடினம் ஏற்பட்டாலோ கை, கால் அசைவினை நிறுத்த முடியா விட்டாலோ, கழிவுப் பொருள் வெளியேற்றம் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தாலோ பேச்சில் குளறல், பார்வை தெளிவின்மை, நடப்பதில் பலவீனம் போன்றவை இருந்தாலோ இப்படி சில மாறுபட்ட அறிகுறிகள் தெரியும் பொழுது மருத்துவர் உதவி உடனடி அவசியம். தவிர்ப்பு முறையாக 


* அதிக கொழுப்பு இல்லாத, நார் சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். 

* தேவையான அளவு வைட்டமின் டி, வைட்டமின் பி பிரிவுகளை மருத்துவர் ஆலோசனைப்படி பெற்றுக் கொள்ளலாம். 

* முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

* முறையான தேவையான அளவு தூக்கம் அவசியம். 

* மது, புகை பிடித்தல் இவற்றினை தவிர்த்திட வேண்டும். 

* ஸ்ட்ரெஸ் அதிகமின்றி இருக்க வேண்டும். 

* சீரான உடல் எடை இருத்தல் வேண்டும். 

* முதுகு வலியை உடனடியாக கவனிக்க வேண்டும். 


மரத்தல் அல்லது உணர்வின்மை இவற்றிற்கு பல காரணங்கள் உண்டு. அதில் அதன் தீவிரம், இடம், பாதிப்பு, அடிக்கடி ஏற்படுகிறதா? நோய், மருந்து இவையும் இடம் பெறுகின்றன. ரத்த குழாய்களில் அடைப்போ அல்லது அழுத்தமோ ரத்த ஓட்டத்தில் தடையினை ஏற்படுத்தலாம். இது பொதுவில் மதமதப்பு மரத்து போகுதல், குறுகுறுப்பு இவற்றினை ஏற்படுத்தலாம். 


இந்த குறைந்த ரத்த ஓட்டம் மேலும் சில அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம். கை, கால்களில் சில்லிப்பு, வெளிர்ந்த அல்லது சற்று நீலம் போன்ற சருமம். கால், கணுகால், பாதத்தில் வீக்கம், சோர்வு, மூட்டு தசை வலி போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம். 


நீண்ட கால நீரழிவு நோய் புற நரம்பு பாதிப்பினை ஏற்படுத்தலாம். ஆக மரத்து போவதினை குறுகுறுப்பினை ஊசி குத்துதல் போன்ற உணர்வினை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent