இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 13.10.2023

வியாழன், 12 அக்டோபர், 2023

 



திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கூடா ஒழுக்கம்


குறள் :277

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

முக்கிற் கரியார் உடைத்து.


விளக்கம்:

வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு.


பழமொழி :

Do what you can with what you have where you are

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்


இரண்டொழுக்க பண்புகள் :


1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

 

2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.


பொன்மொழி :

நாங்கள் எப்போதும் ஒரு சிறந்த பெண்ணைக் கொண்டாடுகிறோம். ஆனால், , பெண் குழந்தைகளை சிறுவயதிலிருந்தே சிறந்து விளங்க ஊக்குவிக்க வேண்டும்” என்றார். - பரிசு குகு மோனா


பொது அறிவு :

1. உலகின் மிகப்பெரிய தீவு எது?

விடை: கிரீன்லாந்து




2. உலகின் மிகச்சிறிய கண்டம் எது?

விடை: ஆஸ்திரேலியா


English words & meanings :

 formidable (adj)- dangerous வலிமையான, பயங்கரமான. confounded (adj.) - confused குழப்பமடைந்த


ஆரோக்ய வாழ்வு : 

வாழைப்பூ: உடல் வெப்பநிலையை குறைக்கும் தன்மை கொண்டது. வாழைப்பூவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு வாழைப்பூவை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும். 


நீதிக்கதை


 ஆபத்து வேளையில் உதவியவர் யார்?


ஒரு சிறிய நகரத்தில் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.


அவர் பலருக்குக் கல்வி கற்றுக் கொடுத்து, அதனால் கிடைக்கும் பொருளில் வாழ்க்கை நடத்தினார்.


அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் சோமன். இளையவன் காமன்.


மூத்தவன் சோமன், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரையும் சமமாகக் கருதி பழகுவது அவன் வழக்கம்.


இளையவன் கல்வியில் ஆர்வம் கொண்டிருந்தான். கல்வி போதித்து வந்தான். அந்தணரான தந்தை இறக்கவே, இருந்த சிறிது நிலத்தை அண்ணனும் தம்பியும் பகிர்ந்து கொண்டனர்.


மூத்தவனான சோமன் விவசாயத்தில் ஈடுபட்டு உழைக்கலானான். ஒரு நாள், சோமன் தாழ்த்தப்பட்ட இனத்து இளைஞர்களோடு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தான்


அதைக் கண்டு வெறுப்படைந்த அந்தணப் பெரியவர் ஒருவர், சோமனிடம் “நீ அந்தண குலத்தில் பிறந்தவன் அல்லவா? தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுடன் பழகலாமா?” என்று கண்டித்து அவனை ஏசினார்.


பெரியவரின் பேச்சு அவனுக்குக் கோபத்தைத் தூண்டியது, “கடவுளின் படைப்பில் உயர்வு தாழ்வு எப்படி இருக்க முடியும்? பிறப்பு என்பது எல்லோருக்கும் சமம். அதில் வேறுபாடு காண்பது முட்டாள்தனமானது. மேலும், அந்த தாழ்த்தப்பட்ட இனத்தவர், உழுது பயிர் செய்து தருவதைத்தானே அனைவரும் சாப்பிடுகிறோம். அதில் வேறுபாடு காண்கிறோமா? மக்களின் பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிப்பது முட்டாள் தனமானது.” என்று கூறினான்.


பெரியவர் பேசாமல் சென்று விட்டார்.


சில நாட்களுக்குப் பிறகு, அந்த அந்தணப் பெரியவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, மயக்கமுற்றுக் கீழே விழுந்துவிட்டார். அதைப் பார்த்த தாழ்த்தப்பட்ட இனத்தவன் ஒருவன், ஓடி வந்து, அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, சிறிது தண்ணீர் குடிக்கச் செய்து, அருகில்இருந்த, தன் குடிசைக்குத் தூக்கிச் சென்று மயக்கத்தை தெளியவைத்து உதவினான்.


பெரியவர் எழுந்து புறப்படும் போது எதிர்பாராமல் அங்கே வந்த சோமன், “அந்தணப் பெரியவர்! மயக்கமுற்று கீழே விழுந்த உங்களைக் காப்பாற்றி உயிர்பிழைக்கச் செய்தவன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன் என்பதை நினைத்துப் பாருங்கள் உங்கள் இனத்தவர் வரும்வரை காத்திருந்தால் நீங்கள் செத்துப் போயிருப்பீர்கள்” என்று இடித்துக் காட்டினான். பெரியர் தலைகவிழ்ந்து, எதுவும் பேசாமல் நடக்கலானார்.


இன்றைய செய்திகள் - 13.10.2023

*மாற்றுத்திறனாளிகள் அருங்காட்சியகத்துக்கு டெல்லியில் "உலகளாவிய வடிவமைப்பு" விருது கிடைத்தது; முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.


* தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வராததால் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதில் தாமதம்.


*தரைவழி தாக்குதலை தொடங்க இஸ்ரேல் ராணுவம் தயாராகிறது. காசாவிலிருந்து நான்கு லட்சம் பேர் வெளியேறினர்.


* மதுரை - சிங்கப்பூர் இடையே வருகிற 22ஆம் தேதி முதல் தினசரி விமான சேவை- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு.


*செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைக்கப்படவுள்ளது.


 *உலகக்கோப்பை கிரிக்கெட்: சேப்பாக்கத்தில் இன்று 2வது போட்டி நியூசிலாந்து- வங்காளதேசம் மோதல்.


Today's Headlines

*Museum for Persons with Disabilities received "Global Design" award in Delhi;  They showed it to the Chief Minister and CM congradulated them. 


 * Delay in onset of North East Monsoon in Tamil Nadu as South West Monsoon has not ended.


 *Israeli army prepares to launch ground attack.  Four lakhs people left Gaza.


*There will be daily flight service between Madurai and Singapore from 22nd onwards- Announced by Air India Express.


 * A state-of-the-art global sports city will be set up at Semmanchery.


  *World Cup Cricket: 2nd Match today in Chepak between New Zealand-Bangladesh.


 Prepared by

Covai women ICT_போதிமரம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent