'ஆசிரியர்கள் பணி வரன்முறைக்கான உத்தரவுகளை தாமதமின்றி பிறப்பிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பணி வரன்முறை மற்றும் தகுதி காண் பருவம் முடித்தது குறித்து, சில மாவட்ட, வட்டார கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்காமல், காலதாமதம் செய்வதாக புகார்கள் வருகின்றன; இது, வருந்தத்தக்க நிகழ்வு.
இந்த விஷயத்தில் மாவட்ட, வட்டார கல்வி அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, தகுதி காண் பருவம் முடித்தது மற்றும் பணி வரன்முறை தொடர்பான உத்தரவுகளை தாமதமின்றி பிறப்பிக்க வேண்டும்.
உத்தரவு வழங்க இயலாவிட்டால், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு, அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக