இந்த வலைப்பதிவில் தேடு

ஒரு வாரமாக தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்

திங்கள், 26 பிப்ரவரி, 2024

 



அரசு பள்ளிகளில், 2009 ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை விட, 3,170 ரூபாய் குறைவாக அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


சம வேலைக்கு சம ஊதியம் கோரி, அ.தி.மு.க., ஆட்சியில் போராட்டம் நடத்தினர். அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த, முதல்வர் ஸ்டாலின், இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கோரிக்கை நிறைவேற்றப் படும் என்றும் கூறப்பட்டது.


தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இந்த கோரிக்கையை நிறைவேற்றப்படாததால், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், கடந்த, 19ம் தேதி முதல் சென்னையில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தப்படுகிறது. நேற்று ஏழாவது போராட்டம் தொடர்ந்தது.


ஒவ்வொரு நாளும், பள்ளிக்கல்வி தலைமை அலுவலகம் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தை ஆசிரி யர்கள் முற்றுகையிடுவதும், அவர்களை போலீசார் கைது செய்து, சமூக நல கூடங்களில் தங்க வைத்து, மாலையில் விடுவிப்பதும் வழக்கமாக உள்ளது.


அரசின் நிதிநிலை கருதி, அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பும்படி, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent