சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்தில் அரசு பணிகளில் பெண்களுக்கு 35 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நேரடி நியமன பணிக்கு, பீகாரை சொந்த மாநிலமாக கொண்ட மகளிருக்கு மட்டுமே 35% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நிதிஷ் குமார் மகளிருக்கு 35% இடஒதுக்கீடு அறிவித்துள்ளார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி தர பீகார் இளைஞர் ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களில் பீகார் இளைஞர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு இதை தெரிவித்த அவர் பீகாரில் நிரந்தரமாக வசிக்கும் பெண்களே இதற்கு தகுதியானவர்கள் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக