ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான இடைநிலை ஆசிரியர் பணிக்கு நேரடி பணி நியமன கலந்தாய்வு ஜூலை 14 முதல் 18ஆம் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையானது அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 3. 35 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் அரசு பள்ளிகளில் தரமும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு மாவட்ட வாரியாக பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி வருகிறது. மறுபுறம் ஆசிரியர்களை நியமனம் செய்வதில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களில் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்வதற்கு முன்பாக குற்ற செயல்களில் ஏதேனும் ஈடுபட்டார்களா என விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கான நேரடி பணி நியமன கலந்தாய்வு தேதியை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதாவது தொடக்கக் கல்வித் துறையில் மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு 21 ஒன்றியங்களுக்கு மட்டும் ஜூலை இரண்டாம் தேதி நடைபெறுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஒன்றியம் கல்வி மாவட்டத்துக்குள் ஜூலை மூன்றாம் தேதி நடைபெறுகிறது.
வருவாய் வட்டத்துக்குள் ஜூலை நான்காம் தேதி நடைபெறுகிறது. இடைநிலை ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு ஐந்தாம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 19 மற்றும் 21ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22 மற்றும் 23ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 24 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இது தவிர ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வான நபர்களுக்கான நேரடி பணி நியமனக் கலந்தாய்வு ஜூலை 14 முதல் 18ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடத்துவதற்கான வசதிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக