இந்த வலைப்பதிவில் தேடு

காலை / மதிய உணவு திட்டத்திற்கு ஆசிரியரை கண்காணிப்பாளராக நியமிப்பதை திரும்ப பெற வேண்டும் - ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

திங்கள், 12 அக்டோபர், 2026




காலை உணவு, மதிய உணவு திட்டத்திற்கு ஒரே ஆசிரியரை கண்காணிப்பாளராக நியமிப்பதை திரும்ப பெற வேண்டும்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை


காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்தை கண்காணிக்க இரு வேளையும் ஒரே ஆசிரியரை கண்காணிப்பு ஆசிரியாக நியமனம் செய்யும் அறிவிப்பை திரும்ப பெற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை:

காலை மற்றும் மதிய உணவு திட்டத்தை கண்காணிக்க சுழற்சி முறையில் ஆசிரியர் ஒருவர் காலை 8.39 மணிக்குள்ளாக வருகை தந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு மாணவர் வருகைக்கு ஏற்ப காலை உணவை தான் சாப்பிட்டு சரி பார்த்து பின்பு மாணவர்களுக்கு கவனத்துடன் பரிமாறப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலை மற்றும் மதிய உணவு திட்டத்தை கண்காணிக்க ஒரு ஆசிரியரை தனியாக நியமிக்க உத்தரவு பிறப்பித்திருப்பது ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் வருத்தமடைய செய்து உள்ளது,

காலை கண்காணிக்கும் ஆசிரியர் மதியமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்போது அவர் எப்படி மாணவர்களுக்கு பாடம் போதிக்க முடியும். ஒரு ஆசிரியர் தொடர்ந்து சாப்பிட கூட நேரம் இல்லாமல் எப்படி பணியாற்ற முடியும் என தெரியவில்லை. பெரும்பாலான தொடக்கப்பள்ளிகளில் இரு ஆசிரியர்களே பணியாற்றி வருகிறார்கள். இத்திட்டம் முழுக்க முழுக்க சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

அத்துறை சார்ந்தவர்கள்தான் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு துணையாக மாணவர்களை ஒழுங்குப்படுத்தி கவனத்துடன் பரிமாறுவதற்கு உதவியாக சுழற்சி முறையில் காலையில் ஒரு ஆசிரியரும், மதியம் ஒரு ஆசிரியரும் கண்காணிக்க பயன்படுத்துவதே சரியானதாக இருக்குமே தவிர, காலை மற்றும் மதியம் என இரு வேளைக்கும் ஒரே ஆசிரியரை கண்காணிப்பு ஆசிரியராக நியமிப்பது சரியானதாக இருக்காது.

எனவே கண்காணிப்பு ஆசிரியர் நியமன அறிவிப்பை திரும்பபெற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இன்சென்ட் திவ்யா, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் லதா, தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent