மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக