இந்த வலைப்பதிவில் தேடு

3 ஆண்டு சட்டப் படிப்பு - ஆக.31 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

 



தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்கீழ் 25 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் (சீர்மிகு சட்டப்பள்ளி உட்பட) இயங்கி வருகின்றன. இவற்றில் 3 ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு 2,290 இடங்கள் உள்ளன.


இவை நடப்பு கல்வி ஆண்டு (2023-24) இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 17-ம் தேதி தொடங்கியது. இதுவரை 16,227 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் ஆகஸ்ட் 20-ம் தேதியுடன் நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


தற்போது பெற்றோர், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வு விதிகள், விண்ணப்ப கட்டணம் உட்படகூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்துகொள்ளலாம். விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் 2-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent