சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (டிச.11) விலை அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரம்
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 அதிகரித்து ரூ. 58,280 -க்கும், கிராமுக்கு ரூ. 80 அதிகரித்து ரூ. 7,285 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.103க்கும், ஒரு கிலோ ரூ.1,03,000க்கும் விற்பனையாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக