இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப்பள்ளி மாணவர்களின் இலவச சீருடையில் T-Shirtக்கு எதிர்ப்பு

செவ்வாய், 6 அக்டோபர், 2026




ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த தையல் தொழிலாளர்கள், மகளிர் மேம்பாட்டு தொழில் கூட்டுறவு சங்கத்தினர், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம் நேற்று வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:


தமிழக அரசின் சார்பில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியரில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு நான்கு இலவச செட் சீருடை வழங்கப்படுகிறது. சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், 96 தையல் மகளிர் கூட்டுறவு சங்கம் இயங்குகிறது. 

இதில் மகளிர் சங்க உறுப்பினர் மாநில அளவில், 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் பெறுகிறோம். இந்நிலையில் சீருடையில் மேலாடைக்கு பதில் டி–ஷர்ட் வழங்க பரிசீலிப்பதாக அரசு தரப்பில் கூறி வருகின்றனர். 

இவ்வாறு மாற்றுவதை மதிக்கிறோம். அதேநேரம் மாற்றத்தால் சீருடை தைத்து வழங்கும் மகளிர் சங்க உறுப்பினர்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் பாதிக்கும். மேலும் டி–ஷர்ட் என மாற்றினால், பின்னலாடை தொழிற்சாலைக்கு சென்றுவிடும். இதனால் நெசவாளர்களின் துணி உற்பத்தியும் பாதிக்கும்.


இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent