இந்த வலைப்பதிவில் தேடு

TN EMIS : 1-12 வகுப்பு மாணவர்கள் ஆன்லைனில் பாடம் படிக்க புதிய வீடியோ இணையதளம் முகவரி - Direct Link

செவ்வாய், 14 ஏப்ரல், 2020




வீட்டில் இருக்கும் மாணவர்கள், ஆன்லைனில் பாடங்களை படிக்க, தமிழக பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.


கொரோனா வைரஸ் பிரச்னையால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் இயங்கவில்லை. 



எதிர்பார்ப்புஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2வுக்கு மட்டும், அனைத்து பாடங்களுக்கும், பொது தேர்வுகள் முடிந்துள்ளன. பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஒரு பாடத்துக்கு மட்டும், தேர்வு நடத்த வேண்டி உள்ளது.


பத்தாம் வகுப்புக்கு மே மாத இறுதியில், பொதுத்தேர்வு நடத்தப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில், வீட்டில் இருக்கும் மாணவர்கள், தங்களது பொழுதுபோக்கு நேரம் தவிர்த்து, ஆன்லைனில் பாடங்களை படிக்க வேண்டும் என, பள்ளிகள் வழியாக அறிவுறுத்தப் பட்டுள்ளது.


இதற்கு, தமிழக பள்ளி கல்வித்துறையின் சார்பில், இணையதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்வி துறையின், https://e-learn.tnschools.gov.in என்ற இணைய தளத்தின் வழியே, வீட்டிலிருந்தே பாடங்களை கற்கலாம்.

இணையதளம் : - ஒன்று முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அவர்களது பாடங்களில் உள்ள அம்சங்கள், வீடியோக்களாக தனித்தனியே, இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.


தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்கு, தனித்தனி பயிற்று மொழிகளில் பாடங்கள் உள்ளன. தமிழ் வழி மாணவர்களுக்கு, அதிக அளவில் பாடங்கள் அடங்கிய வீடியோக்கள் இடம் பெற்று உள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent