இந்த வலைப்பதிவில் தேடு

தலைமை ஆசிரியை சாலை விபத்தில் மரணம்

திங்கள், 22 ஜூலை, 2024

 




விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் தலைமை ஆசிரியை ரேவதி


*இன்று 22.07.2024 காலை பள்ளிக்கு வருவதற்காக தன்னுடைய வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தார்.*


*தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலையை கடக்கும்போது வேகமாக வந்த கார் மோதியதில் தலைமை ஆசிரியை ரேவதி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.*


*தலைமை ஆசிரியை உயிரிழந்ததை கேள்விப்பட்ட சக ஆசிரியர்கள் ஓடிவந்து தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுகின்றனர்....*


காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


*வாகனத்தில் செல்லும் பெண் ஆசிரிய சகோதரிகள் மிகுந்த கவனத்தோடு பயணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் ஓரிரு வினாடிகள் கவனக்குறைவான பயணம் ஒட்டுமொத்தமாக அன்னாரின் குழந்தைகளை அனாதையாக நிற்க வைத்துள்ளது.*


*தவறு யார் மேல் இருந்தாலும்...! பலியாவது நாமும் நமது குடும்பத்தாரும் எனவே தயவு செய்து வாகனத்தில் பள்ளி செல்லும் சகோதரிகள் மிகுந்த கவனத்தோடு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள்.*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent