கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் அமெரிக்க இஸ்ரேல் போரை நிறுத்தக்கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சங்க வலியுறுத்தல்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட சட்ட செயலாளர் இயேசுதாஸ் முன்னிலையில் மாவட்டம் முழுவதும் சங்க நிர்வாகிகள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து அமெரிக்க இஸ்ரேல் போருக்கான எதிர்ப்பை பதிவு செய்தனர்.
போரால் பள்ளி சிறுவர்கள் உட்பட பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிர்ப்பலி ஏற்படுகிறது. இந்த நிலைமையை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து பணி செய்யும் போராட்டத்தை கடந்த இரு நாட்களாக நடத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக