1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக் கான முழு ஆண்டு, மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீடு விரைவில் நடை பெறவுள்ள நிலையில், தேர்வுக்கான வினாத்தாள்களை பதிவு செய்வதற் கான வழிகாட்டுதல்கள் வெளியிடப் பட்டுள்ளன.
இது குறித்து தொடக்கக் கல்வி இயக் குநர் பூ.ஆ.நரேஷ் அனைத்து மாவட் டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப் பியுள்ள சுற்றறிக்கை:
இத்தேர்வுக்கான வினாத்தாள்களை அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கி மதிப்பீட்டை நடத்திடவும், நடுநிலைப் பள்ளிகளில் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டினை மேற்கொள்ளவும் பின் வரும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்ப டுகின்றன.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கு மாணவர்களின் வகுப்பு, பயிற்று மொழி மற்றும் பாடவாரியாக உரிய எண்ணிக்கையில் வினாத்தாள்களை நகலெடுத்து வட்டாரக் கல்வி அலுவ லர்கள் மூலமாக வழங்க வேண்டும். எமிஸ் தளத்தில் மார்ச் 30 வரை வினாத் தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்துப் பள்ளிகளுக்கும் மூன்றாம் பருவத்துக்கான தொகுத்தறி மதிப்பீடு நடைபெறுவதற்கு இரு நாள் கள் முன்னதாகவே வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டும்.
6 முதல் 8 வகுப்புகளுக்கான வினாத் தாள்கள் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://exams.tnschools.gov.in எனும் இணையதளத் தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய் யப்படும்.
இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதற்குத் தீர்வு காண 14417 என்ற கட்ட ணமில்லாத சேவையை ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப் பாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிக ளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர் களுக்கு முழு ஆண்டுத் தேர்வு ஏப். 1 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெற வுள்ளன. இதேபோல், 4, 5-ஆம் வகுப் புகளுக்க்கான தேர்வுகள் ஏப். 6-இல் தொடங்கி 16-ஆம் தேதி வரையும், 1, 2, 3-ஆம் வரை பயிலும் குழந்தைகளுக் கான தேர்வுகள் ஏப். 8-இல் தொடங்கி 16-ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக