திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும், தேர்தல் பணிகளுக்காக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள் மற்றும் பிற அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளும், தபால் வாக்குப்பதிவும் கடந்த 15-ம் தேதி அந்தந்த தொகுதிகளில் நடைபெற்றன. கடந்த 15-ம் தேதி பயிற்சி வகுப்புக்குச் சென்றதால், அதை ஈடு செய்யும் விதமாக 18-ம் தேதியை வேலை நாளாக அறிவித்து உத்தரவு வெளியானது. இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஏற்கனவே பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நாளன்று அரசு விடுமுறை என்றாலும், ஆசிரியர்கள் அன்று பணியில் இருப்பர்.
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையையும் அதிருப்தியையும் கவனித்த மாவட்ட நிர்வாகம், தற்போது 18-ம் தேதியை மீண்டும் விடுமுறை நாளாகவே அறிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தரப்பில் இருந்து அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக