'தமிழகத்தில் கோவை, நீலகிரி உட்பட 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கரூர் மாவட்டம், குளித்தலையில் 14 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கரூர் மாவட்டம் குளித்தலையில் 10; ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 9 செ.மீ., மழை பெய்துள்ளது.
சென்னையில் முகலிவாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ., மழை பெய்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் முதல் தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை, வளி மண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள், வட மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், சில இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக