தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணி யிடங்களை நிரப்புவதே அரசின் தற்போதைய இலக்கு என, அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
கோவையில் பல்வேறு நிகழ் வுகளில் பங்கேற்க நேற்று வந்த பள்ளிக் கல்வித்துறை மற் றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன், விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
முதல்வர் விஜய்யின் தொலைநோக்குப் பார்வை யின்படி, அரசுப் பள்ளி மாணவர் களுக்கு உலக தரத்திலான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத் துவதோடு, டிஜிட்டல் தொழில் நுட்ப வசதிகள் மற்றும் நவீன ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அரசின் நலத்திட்டங்கள் மற் றும் சாதனைகள் தங்குதடை யின்றி கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில், இத்துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலி பணி யிடங்களை விரைந்து நிரப்பு வதே தற்போதைய முதன்மை இலக்கு. மிக விரைவில் ஆசிரியர் பணியிடம் நிரப்பப் படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
.jpg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக