இந்த வலைப்பதிவில் தேடு

Census பணியில் ஈடுபட்ட ஆசிரியை மீது தாக்குதல் - பிரமுகர் கைது

புதன், 12 ஆகஸ்ட், 2026




திண்டுக்கல் மாவட்டம் பாடியூர் அருகே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய தவெக பிரமுகர் கைது செய்யப்பட்டார். போதையில் இருந்த பாலமுருகன்“எதற்காக விவரம் கேட்கிறீர்கள்?” எனக் கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குதல் நடத்தியுள்ளார். லட்சுமணபட்டி கிராமத்தில் நேற்று மாலை இந்தச் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

பாடியூர் அருகே உள்ள லட்சுமணபட்டியில் வடமதுரை நாடுகண்டனுார் ஆரம்பப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஜெயலட்சுமி(40) என்பவர் மக்கள்தொகை தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்பொழுது தவெக பிரமுகர் பாலமுருகன் என்பவர் வீட்டிற்கு சென்று ஜெயலட்சுமி கணக்கெடுப்பு விவரங்களை கேட்டுருக்கிறார்.

மதுபோதையில் இருந்த தவெக பிரமுகர் பாலமுருகன்(37), கணக்கெடுப்பு நடத்த வந்த ஆசிரியையிடம் "எதற்காக விவரம் கேட்கிறீர்கள்?" எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். ஆசிரியை மக்கள் தொகை கணக்கெடுக்க வந்துள்ளேன் எனக்கூறி அடையாள அட்டை, அலைபேசி செயலியை காண்பித்து கேள்விகளை கேட்ட போது ஆசிரியையிடம் இருந்து அலைபேசியை பிடுங்கி, கைகளால் முகத்தில் குத்தி, பின் கைகளை முறுக்கி முதுகில் கொடூரமாகத் தாக்கியுள்ளார் .

பாலமுருகன் தாக்கியத்தில் காயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியை அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பாலமுருகனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent