இந்த வலைப்பதிவில் தேடு

1098-க்கு மாணவிகள் புகார் - ஆசிரியர் போக்சோவில் கைது

திங்கள், 29 செப்டம்பர், 2025

 




அரசு உதவிபெறும் பள்ளியில் 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை இடைநிலை ஆசிரியர் போக்சோவில் கைது


 கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவக்குமார் என்ற இடைநிலை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.



ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக குழந்தைகள் ஹெல்ப்லைன் 1098-க்கு புகார் வந்ததைத் தொடர்ந்து குழந்தைகள் நல அலுவலர்கள் பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை செய்தனர்.


பாலியல் குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent