அரசு பள்ளிகளில் ஒன் பதாம் வகுப்பில் 'திறன்' திட்ட மாணவர்களை கட்டாய தேர்ச்சி செய்ய அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். 'அரசு பாடப் புத்தகத்தையே படிக்காத அந்த மாணவரை எவ்வாறு தேர்ச்சி செய்வது' என தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில் 'திறன்' திட்டம் நடைமுறைப்படுத் தப்பட்டது. 6 முதல் 9 ம் வகுப்பு வரை உள்ள இத் திட்ட மாணவர்களுக்கு தனி வகுப்பறை ஒதுக்கி, சிறப்பு கையேடுகள் வழங்கப்பட்டன. காலாண்டு முதல் ஆண்டுத் தேர்வு வரை தனி வினாத்தாள் வழங்கப்பட்டு இவர்கள் தேர்வு எழுதினர்.
தற்போது 6 முதல் 9ம் வகுப்புக்கான ஆண்டுத் தேர்ச்சி முடிவு வெளியிடும் பணிகள் நடக்கின்றன.
இதில் 9ம் வகுப்பு 'திறன்' திட்ட மாணவர்களுக்கு 80 மதிப்பெண் வழங்கி அவர்களை தேர்ச்சி செய்ய வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் தமிழக அரசின் பாடப் புத்தகத்தையே படிக்காமல் பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சி செய்தால், பொதுத் தேர்வை எவ்வாறு எழுதுவர்.
தமிழ், ஆங்கிலம் வாசிக்கவே தடுமாறும் அவர்களுக்கு பத்தாம் வகுப்பில் நிலையில் உள்ள கற்பிக்க ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருக்காதா என புலம்புகின்றனர். தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
மாநில அளவில் ஒரு லட்சத்திற்கும் மேல் 'திறன்' திட்டத்தில் மாணவர்கள் உள்ளனர். இத்திட்டத்திற்கு பல லட்சங்களை கல்வித்துறை செலவிட்டுள்ளது. அதற்கான பலன் கிட்டியதா இல்லையா என தெரியவில்லை. ஆனால் 9ம் வகுப்பில் அனைவரையும் தேர்ச்சி செய்ய இந்தாண்டு வலியுறுத்தப்படுகிறது.
அதேநேரம் ரெகுலர் பாடங்களை படித்து தேர்வு எழுதிய மாணவர் 35 மதிப்பெண்ணுக்கு கீழ் பெற்றால் அவர்களுக்கு தேர்ச்சியில் சலுகை காட் டலாமா என்பது குறித்தே உரிய வழிகாட்டுதல் இல்லை. அரசு பாடத்தை படிக்காதவர் தேர்ச்சி பெறலாம்; படித்தும் குறைந்த மதிப்பெண் எடுத்தவர் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. இதனால் அடுத்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி கடுமையாக பாதிக் கும் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக