5 தொகுதி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகளை செய்ய கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
சட்டசபை தேர்தலில் முதல்வர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றார். பிறகு, திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததால், அத்தொகுதி காலியாக உள்ளது.
பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இதனால், 4 தொகுதிகளும் காலியனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5 தொகுதிகளிலும் தேர்தல் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இடைத்தேர்தலுக்கான பணிகளை துவக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக திருச்சி, ஈரோடு, செங்கல்பட்டு, திருப்பூர், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடிதம் எழுதி உள்ளார். மேலும், அத்தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்கப்பட்டு உள்ளனர்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக