அரசு பள்ளி ஆசிரியையிடம், 3 சவரன் செயின் பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கோமதி, 43. இவர், கும்மிடிப்பூண்டி அடுத்த அயநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை, தனியார் பள்ளியில் படிக்கும் தன் மகளை அழைத்து செல்வதற்காக, கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரம் பைபாஸ் சாலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த இரண்டு பேர், கோமதி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
கோமதியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் பைக் ஆசாமிகளை துரத்தினர். அவர்கள் பைக்கை விட்டுவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து கோமதி, கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், பைக்கை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக